வைரமுத்து.வலை

கவிப்பேரரசை வாசிக்கவும் நேசிக்கவும்...

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

 

பாடல்: வெண்ணிலா வெண்ணிலா

படம்: இருவர்

 

வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்

கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்

தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்

(வெண்ணிலா)

என்னவா என்னவா எது கண்டு மையல் ஆனாய்

எதனால் எதனால் இமை கடந்து கண்ணாய்ப் போனாய்

நீயெங்கோ பிறந்தாய் நானெங்கோ பிறந்தேன்

ஒரே ஒரு பார்வையால் உயிரைக் குடித்தாய்

(வெண்ணிலா)

கண்களை மூடினால் கண் வந்து உள்ளம் கிள்ளும்

கட்டிலை நாடினால் இரவின்று நீளம் கொள்ளும்

வேரோடு துடிக்க யாரோடு உரைக்க

கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா

(வெண்ணிலா)

 

 


செய்திக் கீற்று

 

தமிழ்த் திரையுலகில் கண்ணதாசனுக்குப் பின்னர்

தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், வசனகர்த்தா, நாவலாசிரியர் வைரமுத்து தனது 56 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். தமிழ்த் திரையுலகில் கண்ணதாசனுக்குப் பின்னர் ஒரு புதிய பாங்கில் திரையிசைப்பாடல்களை அள்ளி வழங்கிய வைரமுத்து அவர்கள் எத்தனையோ சிறந்த பாடல்களின் வெற்றிக்குப் பின்னால் இருக்கின்றார். பிரபலமான இசையமைப்பாளரில் இருந்து பெயர் தெரியாத இசையமைப்பாளர் வரை வைரமுத்துவின் வரிகள் தனித்துவமாக நிற்கும் சிறப்பு வாய்ந்தவை.