வைரமுத்து.வலை

கவிப்பேரரசை வாசிக்கவும் நேசிக்கவும்...

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

 

பாடல்: பூங்காற்றிலே

படம்: உயிரே

 

ஓ...கண்ணில் ஒரு வலியிருந்தால்

கனவுகள் வருவதில்லை

கண்ணில் ஒரு வலியிருந்தால்

கனவுகள் வருவதில்லை

கண்ணில் ஒரு வலியிருந்தால்

கனவுகள் வருவதில்லை

 

பூங்காற்றிலே உன் சுவாசத்தை

தனியாகத்தேடிப்பார்த்தேன்

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

உயிரின் துளி காயும் முன்னே

என் விழி உனை காணும் கண்ணே

என் ஜீவன் ஓயும் முன்னே

ஓடோடி வா

 

பூங்காற்றிலே...

 

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா

கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்

வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா

இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா

 

காற்றில் கண்ணீரை ஏற்றி

கவிதைச் செந்தேனை ஊற்றி

கண்ணே உன் வாசல் சேர்த்தேன்

ஓயும் ஜீவன் ஒடும் முன்னே

ஓடோடி வா...

 

பூங்காற்றிலே...

 

கண்ணில் ஒரு வலியிருந்தால்

கனவுகள் வருவதில்லை

கண்ணில் ஒரு வலியிருந்தால்

கனவுகள் வருவதில்லை

 

வானம் எங்கும் உன் விம்பம்

ஆனால் கையில் சேரவில்லை

காற்றில் எங்கும் உன் வாசம்

வெறும் வாசம் வாழ்க்கையில்லை

உயிரை வேரோடு கிள்ளி

என்னைச் செந்தீயில் தள்ளி

எங்கே சென்றாயோ கள்ளி

ஓயும் ஜீவன் ஓடும் முன்னே

ஓடோடி வா

 

பூங்காற்றிலே...

 

 


செய்திக் கீற்று

உலகத் தமிழர்களுக்கு பொதுவான ஒரு தமிழ்த்தாய் வாழ்த்து வைரமுத்து

உலக தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதப் போவதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க விழாவில் கவிஞர் வைரமுத்து பேசுகையில்,

உலகமயமாதல் என்ற அகில உலக சுனாமியிலிருந்து நாம் மீள வேண்டுமானால் இனம், மொழி இரண்டையும் பாதுகாக்கும் பெரும்பணியை நாம் இப்போதே தொடங்க வேண்டும். காலப்போக்கில் வட்டார மொழிகளும், குறுமொழிகளும் அழிந்து போகும் அபாயமிருக்கிறது. தமிழ் அப்படி அழிந்து போகக்கூடாது. தமிழ் அழியவும் அழியாது. உலகில் இன்று பல ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் அடுத்தடுத்து வரும் நூற்றாண்டுகளில் ஆறே ஆறு பெரிய மொழிகள் மட்டும்தான் தப்பிப் பிழைக்கும் என்று ஆய்வு சொல்கிறது. சீனம், ஆங்கிலம், இந்தி, அரபி, ஸ்பானிஷ், தமிழ் ஆகிய 6 மொழிகள் மட்டுமே எதிர்காலத்தில் எஞ்சி நிற்குமாம். தமிழர்க்குப் பிறந்த பிள்ளைகள் தமிழ் படித்தே ஆக வேண்டும். இங்கே இரண்டு அழகிய கண்மணிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்கள். ஒவ்வொரு மேடையிலும் வெவ்வேறு பாடல்களை பாடிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு பொதுப்பாடல் தேவை. தமிழ்நாட்டின் `நீராரும் கடலுடுத்த' மலேசிய மண்ணுக்கு பொருந்தாது. அதனால் தாயகத்தை பிரிந்து வாழும் தமிழர்கள் அனைவரும் எல்லா நாடுகளிலும் பாடுவதற்கு ஏற்றவாறு தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதி என் சொந்த பொறுப்பில் இசையமைத்து ஒலிப்பதிவு செய்து வழங்கலாம் என்று கருதுகிறேன் என்றார்.....