வைரமுத்து.வலை

கவிப்பேரரசை வாசிக்கவும் நேசிக்கவும்...

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திரைப்படத்துறையின் மற்ற பிரிவினரைப்போல கவிஞர்களுக்கும் சங்கம் அமைக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பா.விஜய் நடித்துள்ள ஞாபங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து இவ்வாறு கூறினார். முன்னணி திரைப்பட கலைஞர்களில் ஒருவரான பா.விஜய் கதாநாயகனாக நடித்துள்ள படம் ஞாபங்கள். ஜீவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீடு நேற்று மாலை நடைபெற்றது. மூத்த கவிஞரான வாலி பாடல் சிடியை வெளியிட, முன்னணி கவிஞரான வைரமுத்து பெற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன், தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், இயக்குனர்கள் கே.பாக்யராஜ், சுரேஷ்கிருஷ்ணா, ஆர்.வி. உதயகுமார், சேரன், அமீர், நடிகர்கள் சத்யராஜ், ஜெயம்ரவி, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.

நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து,

திரைப்படத்துறையின் அனைத்து பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் சங்கம் இருப்பதாகவும், ஆனால் திரைப்பட கலைஞர்களுக்கென்று தனியே சங்கம் இல்லை என்று தெரிவித்தார். திரைப்பட கலைஞர்களுக்காக சங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். அதனை மூத்த கவிஞரான வாலி ஆமோதித்தார். திரைப்பட கவிஞர்கள்  ஒன்று திரண்டு இலங்கை பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும் வைரமுத்து கூறினார். முன்னதாக பேசிய நடிகர் சத்யராஜ், இந்த மேடையை பயன்படுத்தி கொண்டு இலங்கை பிரச்சனைக்காக மீண்டும் திரைப்படத் துறையினர் மாபெரும் போராட்டம் நடத்த வேண்டுகோள்விடுப்பதாக கூறினார். நிகழ்ச்சியில் பேசிய மற்ற கலைஞர்கள் கவிஞனாக இருந்து நாயகனாக உருவெடுத்துள்ள பா.விஜய், தமது முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினர்.

 

 


செய்திக் கீற்று

வைரமுத்துவின் படைப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் !

மதுரையில், கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் மதுரையில் நடந்தது. இதுகுறித்து மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள் குறித்த தேசிய அளவிலான படைப்பிலக்கிய கருத்தரங்கம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் சனிக்கிழமை நடக்கிறது. பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதி உதவியுடன் நடைபெறும் இந்த கருத்தரங்கத்தில் 15 பல்கலைக்கழகங்கள், 105 கல்லூரிகள் பங்கு பெறுகின்றன. வைரமுத்துவின் பல்வேறு படைப்புகளை ஆய்வு செய்து 368 ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரைகளை சமர்ப்பித்து உள்ளனர். இவற்றை 3 தொகுதிகளாக பிரித்து 2  ஆயிரத்து 716 பக்கங்களில் “வைரமுத்து ஆய்வுக் களஞ்சியம்” என்ற நூலாக கருத்தரங்கில் வெளியிடப்படுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த விழாவில் கல்லூரியின் செயலாளர் விஜயராகவன் வரவேற்று பேசுகிறார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கற்பக குமாரவேல் தலைமை தாங்குகிறார். மாநில தகவல் அறியும் சட்டத்துறை ஆணையர் பெருமாள்சாமி,  கல்லூரியின் துணைத்தலைவர் ராஜகோபால், முதல்வர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். வைரமுத்து ஆய்வுக்களஞ்சியம் நூல்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட, டைரக்டர் பாரதிராஜா பெற்றுக் கொள்கிறார். பின்னர் தனது படைப்புகள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசுகிறார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமையில் நடக்கும் நிறைவு விழாவில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தவர்களுக்கு சான்றிதழ்களை வைரமுத்து வழங்குகிறார்" என்றார்.