வைரமுத்து.வலை

கவிப்பேரரசை வாசிக்கவும் நேசிக்கவும்...

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆதித் தமிழன் தோன்றிய பூர்வீக மண் இலங்கை கவிபேரரசு வைரமுத்து முழக்கம்

 

ஆதித் தமிழன் பிறந்த பூர்வீக மண் இலங்கை மண். அந்த மண்ணுக்கு வந்தவர்களால், அந்த மண்ணில் பிறந்தவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று கவிபேரரசு வைரமுத்து கூறினார். இராமேஸ்வரத்தில் தமிழக கலையுலகத்தினர் நேற்று நடத்திய பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது: இலங்கை என்பது தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி. அதனால் அது தமிழர்களுக்கு சொந்தமான மண் என்று உரிமைக் கொள்ளக்கூட எமக்கு வாய்ப்பிருக்கிறது என்ற தொனியில் எனக்கு முன்னர் பேசியவர் கூறிவிட்டுப் போனார். அந்தத் தோழருக்கும் அந்த வரலாற்றை இன்னும் பிழைபட எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கும், இலங்கை வரலாற்றை, இலங்கை மண்ணை புரிந்து கொள்ளாத தமிழப் பெருமக்களுக்கும் ஒரு வரலாற்று உண்மையை நான் சொல்ல விரும்புகின்றேன். உண்மையில் சொல்லப் போனால் இலங்கை என்பது பழைய கடற்கோளால் மூழ்கிப் போன லெமூரியா கண்டத்தின் ஓர் எச்சம். மூன்றாம் கடற்கோளில் மூழ்கிப் போனது குமரிக் கண்டம். அதற்கு இலக்கியச் சான்று இருக்கின்றது. அங்கு மூழ்கிப் போன தீவு குமரிக்கண்டம், நாவரந்தீவு, லெமூரியா கண்டம் அது பிளவுப்பட்டுப் போய் ஒதுங்கிய மூழ்கிய, மலையின் மூழ்காத உச்சிதான் இலங்கைத் தீவு. அந்த லெமூரியா கண்டம்தான், அந்தக் குமரிக் கண்டம் தான் ஆதித்தமிழன் பிறந்த பூர்வீக மண். ஆகவே தமிழன் தோன்றிய மண் அந்த மண். தமிழன் அவன் தொப்புள்கொடி மண் இலங்கை மண். அந்த மண்ணுக்கு வந்தவர்களால் அந்த மண்ணில் பிறந்தவர்கள் தாக்கப்படுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் மன்னாரில் இருக்கக்கூடிய பாறையும், மதுரையில் இருக்கக்கூடிய பாறையும் ஆராய்ச்சியாளர்களால் ஆய்வுச் செய்யபட்டபோது ஒரு பூகோளம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. மன்னாரின் படிகப் பாறையும், மதுரையின் படிகப்பாறையும் ஒரே நிலத் தொடர்ச்சி என்று பூகோளம் சொல்கின்றது. வரலாறு சொல்கின்றது, பூகோளம் சொல்கின்றது. ஆனால் அங்கு தமிழன் இருக்க இடத்திற்கு போராடிக் கொண்டிருக்கின்றான். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றான். இந்திய அரசே!, இந்திய பேரரசே 110 கோடி மக்களுக்கு உரிமை கொண்ட பேரரசே உனக்கு ஒரு வார்த்தை! ஒரு இந்தியன் கடைக்கோடித் தமிழன், வைரமுத்து என்று தமிழை வித்துப் பிழைக்கக்கூடிய கவிஞன். இத்தனைக் கலைக்குடும்பத்தின் சார்பில், இத்தனை தமிழ்க் குடும்பத்தின் சார்பில் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றான். நிலவுக்கு 22 ஆம் திகதி ரொக்கட் அனுப்பப் போகின்றாய்! நிலா பூமியிலிருந்து 3 இலட்சத்து 44 ஆயிரத்து 400 கிலோ மீற்றருக்கு ஏவுகணை அனுப்பப் போகின்ற நீ! 16 கிலோமீற்றர் தூரத்திலுள்ள இலங்கையை கவனிக்காதிருப்பதில் என்ன நியாயமென்றுக் கேட்கின்றோம். இங்கு 16 கிலோமீற்றரில் தமிழன் செத்துக் கொண்டிருக்கின்றான். தமிழச்சி செத்துக்கொண்டிருக்கிறாள்.

 


செய்திக் கீற்று

 

கவியரசு வைரமுத்து சூளுரை

 

கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம் என்று கவியரசு வைரமுத்து சூளுரைத்துள்ளார். தமிழ்த் திரையுலகத்தினர் இராமேஸ்வரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய பிரமாண்ட பேரணியில் கவியரசு வைரமுத்து பேசியதாவது:

இலங்கை தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி. அது தமிழர்களுக்கு சொந்தமான மண். இலங்கையிலும்இ மதுரையிலும் உள்ள படிகபாறைகளை ஆய்வு செய்தபோது அவை ஒரே மண்சார்ந்த நிலத்தில் உருவானதுதான் என்று தெரியவந்தது. நிலவில் இருப்பது என்ன என்பதை அறிந்துகொள்ள 3 லட்சத்து 44 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலாவுக்கு வருகிற 22 ஆம் நாள் நாம் விண்கலத்தை ஏவுகிறோம். ஆனால் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலங்கையில் நடப்பது என்ன என்பதை அறிந்துகொள்ளாமல் இருக்கிறோம். சிவகாசி பட்டாசு போல தமிழ் மக்களை வெடிவைத்து கொல்கிறது சிங்கள இராணுவம். அங்கு சிறுவர்கள்இ சிறுமிகள் மீது கூட அடக்குமுறை கையாளப்படுகிறது. கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம். அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் வெற்றிபெற தமிழர்களை அழிப்பதை லட்சியமாக கொண்டுள்ளார் ராஜபக்ச. அதற்காக உங்கள் ஓட்டுப்பெட்டிகளில் எங்கள் தமிழர்களின் தலைஇ வாக்குகளாக விழவேண்டுமா?. இந்திய அரசு சிறிலங்கா இராணுவத்துக்கு ராடர் கருவிகளை கொடுப்பதாக கூறுகிறார்கள். தொழில்நுட்பங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்க நமது இராணுவ அதிகாரிகளை அனுப்புவதாகவும் கூறுகிறார்கள். உண்மையில் இது நடந்தால் அதனை நிறுத்துங்கள். தமிழின படுகொலையை தடுத்து நிறுத்த ஐ.நா. சபை கொழும்பிலும்இ யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியிலும் கிளைகளை தொடங்கவேண்டும். தனது ஒட்டுமொத்த பொதுவாழ்க்கையை பணயம் வைத்து இலங்கை தமிழர்களை பாதுகாக்க போராடும் தமிழக முதலமைச்சரின் கரத்தை இந்த கலைஞர்கள் குடும்பம் வலுப்படுத்தவேண்டும் என்றார் அவர்