வைரமுத்து.வலை

கவிப்பேரரசை வாசிக்கவும் நேசிக்கவும்...

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாடல்: ஆரிய உதடுகள்

படம்: செல்லமே

 

ஆரிய உதடுகள் உன்னது

திராவிட உதடுகள் என்னது

ஆரியும் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே

ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே

(ஆரிய ...)

 

இதில் யாரு தோல்வியுறும் போதும்

அது தான் வெற்றி என்றாகும்

இதில் நீ வெற்றி பெற வேண்டும்

மன கிடங்குகள் தீப்பற்றி திதிக்கணும்

(ஆரிய ...)

 

எத்தனை உள்ளது பெண்ணில்

அட எது முக பிடித்தது என்னில்

பகல் பொழுதின் பேரழக

ராத்திரியின் சூரழக

மின்னல்கள் சடுகுடு ஆடும் கண்ணா கண்ணா ?

மேலாடை மேகம் மூடும் நெஞ்ச ? நெஞ்ச ?

ஒவ்வொரு பாகமும் பிடிக்கும் ,

உன் உணர்ச்சியின் தீவிரம் பிடிக்கும்

மோகம் வரும் தருணங்களின்

முனகலிடும் ஒழி பிடிக்கும்

கட்டில் மேல் எல்லாம் களைந்த பின்னே பின்னே

கலையாத கொலுசு ரொம்ப பிடிக்கும் பிடிக்கும்

என் நாயக என்னை பிரிகையில்

என் ந்ஜ்யாபகம் தலை காட்டுமா

உன் ஆண் மனம் தடுமாறும ?

பிற பெண்கள் மேல் மனம் போகுமா ?

கண்களே நீயே போனால் வேறு பார்வை வருமா ?

(ஆரிய ...)

 

தேவதை புன்னகை செய்தால்

சிறு தேய்பிறை முழு நிலவாகும்

குறை குடமாய் நான் இருந்தேன்

நிறை குடமாய் ஏன் நிறைந்தேன் ?

ஊனோடு மழையாய் வந்து பொழிந்தாய் பொழிந்தாய்

உயரேல்லாம் ஓடி ஓடி நிறைந்தாய் நிறைந்தாய்

ஜீவித நதியென விரைந்தே

என் ஜீவனின் பள்ளத்தில் நிறைந்தாய்

பிறவியினை தாய் கொடுத்தால்

பிறந்த பயன் நீ கொடுத்தாய்

ஆணுக்கு முழுமை என்ன பெண்தான் பெண்தான்

பெண்ணுக்கு முழுமை என்ன ஆண்தான் ஆண்தான்

அடி காற்றினால் வான் நிறையுது

நம் காதலால் உயிர் நிறையுது

வளர் ஜோதியே எந்தன் பாதியே

நீ என்னதான் எதிர் பார்கிறாய்

 

ஜீவனின் மையம் தேடி கைகள் மீண்டும் தோடும

 

 


செய்திக் கீற்று

 

தனி ஈழமும் பிறக்கும்

 

சூரியனின் அஸ்தமனம் மரணம் அல்ல. கிழக்கு சிவக்கும், மீண்டும் உதிக்கும், தனி ஈழமும் பிறக்கும் என்று கூறியுள்ளார் கவிப் பேரரசு வைரமுத்து. அமெரிக்காவின் அட்லாண்டாவில், வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக, கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார்.

அங்கு அவர் பேசுகையில்,

ஈழத்து கலை நிகழ்ச்சி இங்கே நடந்த போது, என் கண்களின் ஓரம் ஈரமானது. அங்கு போர் நின்று விட்டதாக சொல்லப்படுகிறது. களம் ஓய்ந்து விட்டாலும், காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன. அப்பாவி தமிழர்கள், சம உரிமையோடு, அவரவர் நிலத்தில் குடியமர்த்தப்பட வேண்டும். அவர்களின் துயரத்தில் பங்கேற்கும் விதத்தில், நான் எனது பிறந்த நாளை இந்த ஆண்டு கொண்டாடப் போவதில்லை. அஸ்தமனம் என்பது சூரியனின் மரணம் அல்ல. கிழக்கு சிவக்கும். மறுபடி உதிக்கும். அது போல் ஈழம் பிறக்கும் என்றார் வைரமுத்து.