வைரமுத்து.வலை

கவிப்பேரரசை வாசிக்கவும் நேசிக்கவும்...

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

 

பாடல்: உயிரே பிரியாதே

படம்: அடைக்கலம்

 

உயிரே பிரியாதே

உறவே விலகாதே

 

உயிரே பிரியாதே

உறவே விலகாதே

 

உயிரே பிரியாதே

உறவே விலகாதே

 

பிறந்தது தானே தாய் தந்த வாழ்கை

பிறவியில் மீதம் நீ தந்த வாழ்கை

உலகம் உடைகின்ற போதும்

உயிரே அருகில் இரு போதும்

 

உயிரே பிரியாதே

உறவே விலகாதே

 

உச்சி முதல் பாதம் வரை

உதடுகள் நடத்தி

உணர்ச்சியின் அணைகளை உடையது விட்டாயே

 

என்ன இது என்று உன்னை

வினாவிட வந்தேன்

இதழ்களை இதழ்களை அடைத்து விட்டாயே

 

மொத்த மனித குளம்

கண்ட சுகம் முழுதும்

ஒத்த இரவில் முடிப்போம்

 

அண்டம் முடியும் வரை

இன்று கொண்ட சுகம்

கண்டு கண்டு களிப்போம்

 

உயிரே பிரியாதே

உறவே விலகாதே

உயிரே பிரியாதே

 

எனக்கு ஒன்று உனக்கு ஒன்று

இரு பிள்ளை தந்தை

கணவனே நீ செய்த

கருணைக்கு வணக்கம்

 

படுகையில் சுமந்ததால்

பத்து மாதம் சுமந்தாய்

பாவையே நீ கொண்ட

பொறுமைக்கு வணக்கம்

 

நாம் கொண்ட குடும்பம்

ஒரு கோவில் என்று

குல தெய்வம் வந்து வணங்கும்

 

என் மூச்சு பேச்சு இந்த வழக்கை யாவும்

இந்த மூன்று பேரில் அடங்கும்

 

உயிரே பிரியாதே

உறவே விலகாதே

விலகாதே

 

பிறந்தது தானே தாய் தந்த வாழ்கை

பிறவியில் மீதம் நீ தந்த வாழ்கை

உலகம் உடைகின்ற போதும்

உயிரே அருகில் இரு போதும்

 

உயிரே பிரியாதே ...

உறவே விலகாதே ...

 

 


செய்திக் கீற்று

 

கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது !

கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருதான ‘சாதனா சம்மான்’ விருதினை இந்திய மொழிக்கழகம் வழங்குகிறது. கொல்கத்தாவில் இயங்கி வரும் இந்த கழகம் தேசிய அளவில் 14 மொழிகளில் சிறந்த படைப்பாளிகளை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு இலக்கியம், நாவல், திரைப்பாட்டு மூலமாக கவிஞர் வைரமுத்து இந்திய இலக்கியத்திற்கு செய்த பங்களிப்பிற்காக தேசிய இலக்கிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 51 ஆயிரம் ரூபாய் பொற்கிழியும், பாராட்டு பட்டயமும் வைரமுத்துவுக்கு வழங்கப்படும். இந்த விருது தமக்கு மகிழ்ச்சி தருவதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்.