வைரமுத்து.வலை

கவிப்பேரரசை வாசிக்கவும் நேசிக்கவும்...

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
பங்களிப்பு

கவிப்பேரரசு அவர்களின் வாசக நெஞ்சங்களை  அன்புடன் வரவேற்கின்றோம்.


இவ்விணைய தளத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்யப் படவேண்டிய திருத்தங்கள், சட்ட ரீதியான ஆலோசனைகள் ஆகியவற்றை அன்புடன் எதிர்பார்க்கின்றோம்.


இவ்வலைத்தளத்தின் வளர்ச்சியில் பங்குபெற பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களிடம் உள்ள கவிப்பேரரசு அவர்களின் அரிய புகைப்படங்கள்,ஒலி/ஒளி காட்சிகள்,நாளிதழ் மற்றும் மாத இதழ்களில் வெளிவந்த பேட்டிகள், செய்திகள் போன்றவற்றின் நகல்களை அனுப்பி, இவ்வலைத் தளத்தை முழுமை பெற உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மேலும், கவிப்பேரரசு அவர்களைப் பற்றிய நூல்கள், படைப்புகளின் மீதான திறனாய்வு நூல்கள், பல்கலைக் கழக ஆய்வேடுகள், மொழிபெயர்ப்பு விவரங்கள், கட்டுரைகள்  உள்ளிட்ட தகவல்களை அனுப்பி உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மேலும் வைரமுத்து அவர்கள் பங்கு பெரும் நிகழ்சிகள், அவரைப் பற்றிய கருத்தரங்குகள், விழாக்கள், சந்திப்புகள் போன்றவற்றின் அறிவுப்புகள் ஆகியவற்றை இவ்வலைத்தளத்தில் வெளியிட்டு  பயன்பெறுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.


தொடர்புக்கு: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 


செய்திக் கீற்று

 

ஈழத்தமிழருக்காக என் ரத்தம் எல்லாம் கண்களுக்கு ஏறுகிறது வைரமுத்து ஆவேசம் !

 

கவிஞர் பா.விஜய் நாயகனாக நடிக்கும் ‘ஞாபகங்கள்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. இவ்விழாவில் பாடல் கேசட்டை வாலி வெளியிட வைரமுத்து பெற்றுக்கொண்டார்.

வைரமுத்து பேசும்போது,

"இந்த மேடையில் ஈழப்பிரச்சனையை பேசக்கூடாது என்று மனசு சொல்கிறது.  ஆனால் என் ரத்தம் எல்லாம் கண்களுக்கு ஏறுகிறது. உலக நாடுகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறது.  ஆனால் ராஜபக்சே கொஞ்சமும் இசையவில்லை. ஐநா சொல்லியும் கூட, அமெரிக்கா சொல்லியும் கூட இசையவில்லை. உலக நாடுகளுக்கெல்லாம் தலைவன் என்று அமெரிக்கா மார் தட்டுகிறது.  அது சொல்லியே ராஜபக்சே கேட்கவில்லை. இனி தலைவன் என்று தம்பட்டம் அடிக்கக்கூடாது".