வைரமுத்து.வலை

கவிப்பேரரசை வாசிக்கவும் நேசிக்கவும்...

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
பங்களிப்பு

கவிப்பேரரசு அவர்களின் வாசக நெஞ்சங்களை  அன்புடன் வரவேற்கின்றோம்.


இவ்விணைய தளத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்யப் படவேண்டிய திருத்தங்கள், சட்ட ரீதியான ஆலோசனைகள் ஆகியவற்றை அன்புடன் எதிர்பார்க்கின்றோம்.


இவ்வலைத்தளத்தின் வளர்ச்சியில் பங்குபெற பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களிடம் உள்ள கவிப்பேரரசு அவர்களின் அரிய புகைப்படங்கள்,ஒலி/ஒளி காட்சிகள்,நாளிதழ் மற்றும் மாத இதழ்களில் வெளிவந்த பேட்டிகள், செய்திகள் போன்றவற்றின் நகல்களை அனுப்பி, இவ்வலைத் தளத்தை முழுமை பெற உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மேலும், கவிப்பேரரசு அவர்களைப் பற்றிய நூல்கள், படைப்புகளின் மீதான திறனாய்வு நூல்கள், பல்கலைக் கழக ஆய்வேடுகள், மொழிபெயர்ப்பு விவரங்கள், கட்டுரைகள்  உள்ளிட்ட தகவல்களை அனுப்பி உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மேலும் வைரமுத்து அவர்கள் பங்கு பெரும் நிகழ்சிகள், அவரைப் பற்றிய கருத்தரங்குகள், விழாக்கள், சந்திப்புகள் போன்றவற்றின் அறிவுப்புகள் ஆகியவற்றை இவ்வலைத்தளத்தில் வெளியிட்டு  பயன்பெறுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.


தொடர்புக்கு: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 


செய்திக் கீற்று

தமிழ் மொழிக்கு அடையாளம் "திருக்குறள்..."

தமிழ் தொண்டாற்றிய தமிழறிஞர்களுக்கு "தமிழ்ப் பேரவைச் செம்மல்" விருது வழங்கும் விழா 13.02.09 அன்று மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் மு.வ.அரங்கில் நடைபெற்றது.   தமித்தாய் வாழ்த்துப்பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது.   பேராசிரியர்.இரா.மோகன் (ஆட்சிக்குழு உறுப்பினர்) வரவேற்புரை வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் புகழ்படைத்த தமிழ்ப்பேரறிஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு "தமிழ்ப் பேரவைச் செம்மல்" விருது வழங்கி பேரவையின் உறுப்பினாராக்குவது, தமிழ்ச்சிந்தனை, பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சி கருதித் தமிழ் அறிஞர்களை அழைத்து அவர்தம் சிறந்த சிந்தனைகளை வெளிப்படுத்தும் நோக்கில் தமிழ்க் கருத்தரங்கம் ஆண்டுதோறும் நடத்துதல், மேலும் மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்விப் பேரவையின் வாழ்நாள் உறுப்பினர்களாகச் சேர்த்து கொள்வது" என்று இதன் நோக்கம் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் துணைவேந்தர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், இரா.கற்பக குமாரவேல் தலைமையேற்று தன் உரையில் விரிவாக எடுத்துக் கூறினார்.

பின்னர் தமிழ்ச்சான்றோர்கள் ஆறு பேருக்கும் அவர்கள் ஆற்றிய தமிழ் பணிக்காக விருதுகள் வழங்கும் விழா துவங்கியது.

பேராசிரியர் அடிகளாசிரியர் - இவர் 57 நூல்கள், தொல்காப்பிய ஆய்வுகள், கவிதை நூல்கள், உரைநடை நூல்கள் என்று தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் பற்றி சிந்தித்து கொண்டிருப்பவர்.

"உரை வேந்தர்" ஒளவை துரைசாமிப்பிள்ளை அவரின் தலைமகன் பேராசிரியர். ஒளவை நடராசன் இவர் சங்க காலப்புலமைச் செல்வியர் எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும், முன்னாள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பிலும் இருந்ததுடன் இன்றும் தமிழ்ப்பணியாற்றி வருகிறார்.

புலவர் இரா.இளங்குமரன் திருக்குறள் ஓதி மண விழா, மணி விழா, மனை புகுவிழா என 3500 நிகழ்வுகளை நடத்தி சாதனை புரிந்திருக்கிறார்.  திருக்குறளுக்கு வாழ்வியல் உரையும், கருத்துரையும் கண்டதுடன் மேலாய்வு நூல்களாக 60 நூல்களை எழுதியிருக்கிறார்.

பேராசிரியர் எ.சுப்பராயலு தமிழ்ப் பண்பாடு, தமிழ் வரலாறு தொடர்பான ஆங்கிலத்தில் ஆய்வு நூல்கள் பல புனைந்துள்ளார். இவரின் பல நூல்கள் உலகம் முழுவதிலும் பல பேராசிரியர்களால் மேற்கோள் காட்டப்படும் சிறப்பிற்கு உரியவை.

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினத்தின் 46 ஆவது குருமகா சந்நிதானம் குன்றக்குடி கிராமத்திட்ட குழுவின் தலைவர், "சமய வாழ்வு", "காற்றில் வந்த கருத்து மழை" என்பன அடிகளாரின் கைவண்ணத்தில் உருவான நூல்கள்.

பேராசிரியர் பி.விருத்தாசலம், "கண்ணகி சிலம்பிந்த காரணம்" என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம், மரூஉ மொழிகளும், வமூஉ மொழிகளும், சிந்தனைச்சுடர் முதலான நூல்கள், சென்னை பல்கலைக் கழகத்தின் அடையாளச் சின்னத்தில் "கற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும்" என்ற தொடரினை இடம் பெற செய்தவர்.

இவர்கள் அனைவருக்கும் "கவிப்பேரரசு" வைரமுத்து பொன்னாடை போர்த்தி, பொற்பதக்கமும், பொற்கிழியும், "தமிழ்ப் பேரவை செம்மல்" என்ற விருதையும் வழங்கி கெளரவித்தார்.

பின்னர் "கவிப்பேரரசு" வைரமுத்து தன் சிறப்புரையில்... " தமிழாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பெரு மக்களுக்கெல்லாம் விருது வழங்கி சிறப்பு செய்வதற்கு எனக்கு கிடைத்த விருதுகளையெல்லாம் விட பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.  இங்கு வந்திருக்கும் மாணவ-மாணவிகளே! சான்றோர்களே! உங்கள் வாழ்நாளில் ஒரு மூன்று மணி நேரம் தந்திருக்கிறீர்கள் இந்த தமிழ் சான்றோர்களுக்காக... இது தான் இன்றைய விழாவின் சேதி!  தமிழ்நாட்டில் சேதியற்ற கூட்டம் அதிகமாகவே நடந்து கொண்டிருக்கிறது.  ஒரு பத்து, பதினைந்து வயதில் மீசை முளைத்த காலம் முதல் தங்கள் வாழ்நாள் வரை தமிழுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பைபிள், குரான், பகவத்கீதை- க்கு கிடைத்த வரவேற்பு ஏன் இன்னும் திருக்குறளுக்கு கிடைக்கவில்லை?  ஒரு நட்சத்திர விடுதியிலாவது தமிழ் திருக்குறள் இருக்கிறதா? இல்லை!   நமது கலாசாரத்தை பற்றி நமக்கே கவலை இல்லை!  அப்புறம் எப்படி திருக்குறள் வளரும்?  தமிழர்களின் உணவு, உடை, நிலம், அடையாளமா என்று பார்த்தால் அதுவும் இல்லை! அவை எல்லாம் மாறிவிட்டன.  தமிழர்களின் மாறாத அடையாளம் மொழி மட்டுமே! இந்த தமிழ் மொழிக்கு அடையாளமாக திருக்குறள் திகழ்கிறது.  ஆனால் தமிழ் அறிவின் சமூகம் சிறுபான்மை சமூகமாக இருக்கிறது.  எனவே வைதீக நம்பிக்கைப்படி இவர்கள் மீது "திருஷ்டி" பட்டு விடக்கூடாது என்பதற்காகவும்... நன்றி சொல்வதற்காகவும் இந்த "பூ" இந்த தமிழ் வேர்களின் கால்களில் விழுகிறேன்"  என்று பேசினார்.

விருது பெற்றோர் சார்பில் பேராசிரியர் ஒளவை நடராசன் ஏற்புரை நிகழ்த்தினார்.  அவரைத்தொடர்ந்து, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தன் ஏற்புரையில்... குறிப்பிடும் போது... "தமிழகத்திற்கு எது வேண்டுமானாலும் தலைநகரமாக இருக்கலாம்.  தமிழுக்கு தலைநகரமாக இந்த மதுரை மாநகரம் மட்டும்தான்!  வரலாற்றை வென்று நிற்கிறது.  உலகத்திலேயே ஒரு சமயத்தின் வெற்றியை ஒரு மொழி வென்றிருக்கிறது என்றால் அது இந்த தமிழ் மொழிதான்!

இளைஞர்களுக்கு தன்பலம் தெரியவில்லை!  தெரிந்திருந்தால் தனித்து நின்றிருப்பார்கள்.  ஆனால் இரவல் மொழிகளிலேயே வளர ஆசைப்படுகிறார்கள்.  ஆக இன்று நம்முடைய தனித்தன்மையை இழந்து விட்டோம்.  அண்டை நாடுகள் அமைதியுடன் பூத்து குலுங்க நாம் ஜாதி, சமயம், அரசியல் என்கிற அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு தமிழன் என்ற உணர்வோடு ஒன்று திரள வேண்டும்"