வைரமுத்து.வலை

கவிப்பேரரசை வாசிக்கவும் நேசிக்கவும்...

 • Increase font size
 • Default font size
 • Decrease font size
விருதுகள்


 • கலைமாமணி விருது (1990)

 • கள்ளிக்காட்டு இதிகாசத்திற்கு சாகித்ய அகாடமி பரிசு கிடைத்தது (2003)

 • பத்மஸ்ரீ (2003)

 

 • சிறந்த பாடலாசிரியருக்கன தேசிய விருது (ஐந்து முறை). விருது பெற்ற திரைப்படங்கள் (பாடல்கள்)
 • 1986 - முதல் மரியாதை
  பாடல்:பூங்காற்று திரும்புமா
  இயக்குனர் : பாரதிராஜா


 • 1993 - ரோஜா
  பாடல்:சின்னச்சின்ன ஆசை
  இயக்குனர் : மணிரத்னம்


 • 1995 - கருத்தம்மா
  பாடல்:போறாளே பொன்னுத்தாயி...
  இயக்குனர் : பாரதிராஜா


 • 2000 - சங்கமம்
  பாடல்:முதன் முறை கிள்ளிப் பார்த்தேன்
  இயக்குனர் : சுரேஷ் கிருஷ்ணா


 • 2003 - கன்னத்தில் முத்தமிட்டால்
  பாடல்:விடை கொடு எங்கள் நாடே..
  இயக்குனர் : மணிரத்னம்

 


செய்திக் கீற்று

நான் பொறாமைப்படுவதில்லை

 

கவிப்பேரரசு வைரமுத்துவின் 56வது பிறந்தநாள் பொன்மணி மாளிகையில் கொண்டாடப்பட்டது. விழாவில் கவிஞர் சிற்‌பி பாலசுப்பிரமணியத்திற்கு சிறப்பு விருதினையும், 20 ஆயிரத்துக்கான பண முடிப்பையும் வைரமுத்து வழங்கினார். வைரமுத்து எழுதியுள்ள 'பாற்கடல்' புத்தகமும், கவிஞருடனான அனுபவத்தை 'ஒரு தோப்புக் குயிலாக' என்ற புத்தகத்தின் மூலமாக எழுதியுள்ள மரபின்மைந்தன் முத்தையாவின் நூலும் திறனாய்வு செய்யப்பட்டன. விழாவில் நிறைவுரை ஆற்றிய வைரமுத்து, "என்னிடம் யாரும் கண்டுபிடிக்க முடியாத ஒரு குணம் உண்டு. நான் யாரைப் பற்றியும் பொறாமைப் படுவதில்லை. பொறாமை என்பது களை. நான் பயிராகவே இருக்க ஆசைப்படுகிறேன். களையாக இல்லை. எவனுக்கு தன்னம்பிக்கை அதிகமோ அவன் பொறாமைப்பட மாட்டான். தமிழுக்காகவும், தமிழருக்காகவும் உழைத்துக்கொண்டே இருப்பதுதான் எனது மிச்ச வாழ்க்கையில் நான் எழுதி வைத்துள்ள சாசனம். உலகத்தின் மூத்த மொழிகள் 5 என்றால், 5ல் 1 தமிழல்லவா?" என்று உணர்ச்சி மேலிட உரை நிகழ்த்தினார்.