வைரமுத்து.வலை

கவிப்பேரரசை வாசிக்கவும் நேசிக்கவும்...

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
நூல்கள்
கவிபேரரசு வைரமுத்துவின் நூல்கள்
  1. வைரமுத்து  கவிதைகள்
  2. கள்ளிகாட்டு  இதிகாசம்
  3. இதனால் சகலமானவர்களுக்கும்
  4. இந்த  பூக்கள்  விற்பனைக்கு  அல்ல
  5. இந்த  குளத்தில்  கல்  எறிந்தவர்கள்
  6. ஒரு  போர்க்களமும்  இரண்டு  பூக்களும்
  7. காவி  நிறத்தில்  ஒரு  காதல்
  8. என்  பழைய  பனை ஓலைகள்
  9. இன்னொரு  தேசிய  கீதம்
  10. வைகறை  மேகங்கள்
  11. ரத்ததானம்
  12. சிற்பியே  உன்னை  செதுக்குகிறேன்
  13. எல்லா  நதியுளும்  என்  ஓடம்
  14. திருத்தி  எழுதிய  தீர்ப்புகள்
  15. கவிராஜன்  கதை
  16. வானம்  தொட்டுவிடும் தூரம்தான்
  17. தண்ணீர்  தேசம்
  18. நேற்று  போட்ட  கோலம்
  19. தமிழுக்கு  நிறம்  உண்டு
  20. மீண்டும்  என்  தொட்டிலுக்கு
  21. கொடிமரந்தின்  வேர்கள்
  22. வில்லோடு  வா  நிலவே
  23. என்  ஜன்னலின்  வழியே
  24. ஒரு மௌனத்தின்  சப்தங்கள்
  25. கல்வெட்டுகள்
  26. கேள்விகளால்  ஒரு  வேள்வி
  27. கொஞ்சம்  தேநீர்  நிறைய  வானம்
  28. வடுகபட்டி  முதல்  வல்கா  வரை
  29. பெய்யென  பெய்யும் மழை
  30. இதுவரை நான்
  31. ஒரு  கிராமத்து  பறவையும்  சில கடல்களும்
  32. பாற்கடல்
  33. கருவாச்சி காவியம்
 


செய்திக் கீற்று

 

பெங்களூரில் தமிழ் அறிஞர்கள் மாநாடு

 

பெங்களூரில் தமிழ் அறிஞர்கள் மாநாடு நடத்தப்படும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.பெங்களூர் தமிழ்சங்கத்தில் கவிஞர் வைரமுத்துவுடன் தமிழ் ஆர்வலர்கள் கலைந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது நான் பல தமிழ்சங்கங்களுக்கு சென்று உள்ளேன். அங்கெல்லாம் எனக்கு ஆழ்ந்த அன்பு கிடைத்தது. ஆனால் இங்கு தான் எனக்கு சூழ்ந்த அன்பு கிடைத்து உள்ளது. என் தமிழ் மீது காதல் கொண்டு நீங்கள் என்னை சூழ்ந்து வரவேற்பு கொடுத்து உள்ளீர்கள். எனது இறுதி மூச்சு இருக்கும் வரை நான் தமிழுக்காக எழுதுவேன். டெல்லியில் திருவள்ளுவர் சிலை வெளியே கிடந்தது. அந்த சிலையை பாதுகாப்பான இடத்தில் வைக்க முதல் அமைச்சர் கருணாநிதி நடவடிக்கை எடுத்தார். அந்த விழாவின் போது பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறப்பது தொடர்பாக நான் அவரிடம் பேசினேன். பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறக்க அவர் டெல்லியில் அப்போது விதை விதைத்தார். இதை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் முன்னிலையில் அவர் அறிவித்தார். அது இவ்வளவு சீக்கிரம் முளைத்து விட்டது. அந்த பெருமை உங்களுக்கும் உண்டு. பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டபோது எனது தாயின் கருவறையில் இருந்து பிறந்ததாக நான் நினைத்தேன். மதம், கட்சி போன்றவற்றுக்கு அடையாளம் இருக்கிறது. தமிழுக்கு அடையாளம் திருவள்ளுவர் தான். இப்போது நமது உணவு, உடை, எழுத்து போன்றவையெல்லாம் மாறி போய் விட்டன. ஆனால் மாறாமல் இருப்பது திருவள்ளுவர் என்ற ஞான அடையாளம் தான். அண்ணன் தம்பி உறவு, கட்சி உறவு போன்ற எந்த ஒரு உறவையும் விட தமிழ் உணர்வு தான் பெரியது. பாரதியாரின் இறுதி ஊர்வலத்தின்போது வெறும் 18 பேர் தான் சென்றார்கள். இது அவரது உடலை மொய்த்த ஈக்களை விட குறைவான எண்ணிக்கை தான். ஆனால், அவர் வாழும் போது அவரை யாரும் கவுரவிக்கவில்லை. ஆனால் தற்போது அவருக்காக எத்தனையோ சிலைகள், எத்தனை பல்கலைக்கழகங்கள் வைத்து பெருமைப்படுத்தி வருகின்றனர்.