வைரமுத்து.வலை

கவிப்பேரரசை வாசிக்கவும் நேசிக்கவும்...

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செய்திக் கீற்று

 

ஏ.ஆர்.ரகுமானுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து

 

'ஸ்லம்டாக் மில்லினர்’ படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசை மற்றும் சிறந்த பாடலுக்கான இரண்டு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது,

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு தமிழன் இந்தியாவுக்கு ஈட்டித்தந்திருக்கும் மிகப்பெரிய பெருமை. இது ஏ.ஆர்.ரகுமானின் உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அவர் இன்னும் பல விருதுகளை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். பொதுவாக மூன்றாம் உலக நாடுகள் ஆஸ்கர் விருதுகளால் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. அந்த பழியை இந்த விருது துடைத்திருக்கிறது. ஏ.ஆர்.ரகுமானின் இந்த விருதால், தமிழகத்தின் பெருமை, இந்தியாவின் பெருமை, உலக கலையுலகில் வெளிச்சத்தை காட்டியிருக்கிறது. மீண்டும் மீண்டும் ஏ.ஆர்.ரகுமானுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.