வைரமுத்து.வலை

கவிப்பேரரசை வாசிக்கவும் நேசிக்கவும்...

  • Increase font size
  • Default font size
  • Decrease font size


செய்திக் கீற்று

கடைசி மண் பானை துளை போடும் வரையில்

'அடைக்கலம்' டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. டிரைலரை வெளியிட்டு மைக்கை பிடித்த வைரமுத்து தற்போதைய பாடல்களின் தரம் பற்றியும் படைப்பாளிகளின் நிலை பற்றியும் ஒரு பிடி பிடித்து விட்டார்.

கவிதையும் காரசாரமும் கலந்த வைரமுத்துவின் பேச்சிலிருந்து......

"கடைசி மண் பானை துளை போடும் வரையில் தொப்புள் கொடி உறவு என்பது அறுந்து போவதில்லை. உறவின் இந்த உன்னதத்தைதான் 'அடைக்கலம்' படம் சொல்கிறது. சக மனிதனை நேசிப்பதை கற்றுக்கொடுப்பதுதான் கலையின் அவசியம். அந்த வேலையை இந்த படம் செய்யும் என்று நம்புகிறேன். இப்போதெல்லாம் வானொலியில் பாடலாசிரியர்கள் பெயரையோ இசையமைப்பாளர்கள் பெயரையோ வாசிப்பதில்லை. ஒரு பாடல் உருவாக நாங்கள் படும்பாடு கொஞ்சமல்ல. எனவே தயவு செய்து படைப்பாளிகளின் பெயரை மறைக்காதீர்கள். தற்போதைய சூழலில் வெளிவரும் படங்களில் பாடலுக்கு சரியான தளம் கிடைப்பதில்லை. 'ஷாஜகான்' படத்தில் 'மெல்லினமே மெல்லினமே' உட்பட அருமையான மெலோடி பாடல்களை எழுதியிருக்கிறேன். ஆனால் ஹிட் ஆனது என்னவோ 'சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்' என்ற குத்து பாடல்தான். இப்படியான கருவாட்டு வாசத்தில் மல்லிகை பூ மறுதலிக்கப்படுகிறது. இந்த நிலையை மாறவேண்டும்" என்று முடித்தபோது கவிஞரின் கண்களில் அந்தி சூரியனின் சிவப்பு.