வைரமுத்து.வலை

கவிப்பேரரசை வாசிக்கவும் நேசிக்கவும்...

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
ஆய்வுக் கட்டுரைகள்
வணக்கம் அன்பர்களே!

உலகெங்கிலும் உள்ள கவிப்பேரரசு அவர்களின் வாசகர்கள் ஒன்று கூடி மகிழவும் ,கவிப்பேரரசு அவர்களின் படைப்புகள், படைப்புகளின் மீதான விமர்சனங்கள், விவாதங்கள், ஆராய்ச்சிகள் என விரியும் இலக்கிய தேடல்களுக்குமான வலைத்தளம் இது.

வெறும் பிரபலப்  பாடலாசிரியர் என்று  ஊடகங்களால் உருவாக்கப்பட்ட மாயத்திரை விலக்கி, அவரது பன்முகப் பரிமாணத்தை, இலக்கியத்தின் மகத்துவத்தை,மனிதநேய மாண்பை, உழைப்பால் உயர்ந்த தனிமனித  ஆளுமைத் திறனை உலகெங்கும் எடுத்துச் செல்வதன் மூலம் , வரும் தலைமுறைகளுக்கு இந்த  வழிகாட்டி ஆளுமையை அறிமுகம் செய்து வைப்பதை எமது கடமையாய்க் கருதுகிறோம்.

கவிப்பேரரசு அவர்களின் படைப்புகளை பாரறியச் செய்து, அவை உலகின் எந்த மொழிப் படைப்புகளோடும் போட்டியிட்டு வெல்லக் கூடியவை என்பதை பறைசாற்றுவதே எமது நோக்கம்.

கவிப்பேரரசு படைப்புகள் மீதான விமர்சனங்கள், விவாதங்கள் , தனிநபர்  திறனாய்வுகள் , பல்கலைக்கழக ஆய்வுகள், மொழிபெயர்ப்புகள் போன்றவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம், அம்முயற்சிகள்  ஒரே இடத்தில் தேங்க விடாமல் அடுத்த கட்ட நகர்வுக்கு எடுத்துச் செல்ல இவ்வலைத் தளம் உறுதுணையாய் இருக்கும்.

தமிழின் தவப்புதல்வரின், இந்நூற்றாண்டின் இணையற்ற மனிதரின் புகைப்படங்கள்,ஒலி/ஒளிக் கோப்புகள் மற்றும் ஊடகச் செய்திகள் போன்றவற்றை இணையத்தில் பாதுகாக்கும் இணைய ஆவணக் காப்பகமாகவும் இந்த வலைத் தளம் செயல்படும்.

தமிழிணையத்தின் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துவான் மூலம் இணையத் தமிழ் வளர்ச்சிக்கும் இவ்வலைத்தளம் முக்கியப் பங்காற்றும்.

இவ்வலைத் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெற, கவிப்பேரரசின் இலக்கியக் கடலில் மூழ்கி முத்தெடுக்க அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம். 


செய்திக் கீற்று

வைரமுத்துவின் படைப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் !

மதுரையில், கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் மதுரையில் நடந்தது. இதுகுறித்து மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள் குறித்த தேசிய அளவிலான படைப்பிலக்கிய கருத்தரங்கம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் சனிக்கிழமை நடக்கிறது. பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதி உதவியுடன் நடைபெறும் இந்த கருத்தரங்கத்தில் 15 பல்கலைக்கழகங்கள், 105 கல்லூரிகள் பங்கு பெறுகின்றன. வைரமுத்துவின் பல்வேறு படைப்புகளை ஆய்வு செய்து 368 ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரைகளை சமர்ப்பித்து உள்ளனர். இவற்றை 3 தொகுதிகளாக பிரித்து 2  ஆயிரத்து 716 பக்கங்களில் “வைரமுத்து ஆய்வுக் களஞ்சியம்” என்ற நூலாக கருத்தரங்கில் வெளியிடப்படுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த விழாவில் கல்லூரியின் செயலாளர் விஜயராகவன் வரவேற்று பேசுகிறார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கற்பக குமாரவேல் தலைமை தாங்குகிறார். மாநில தகவல் அறியும் சட்டத்துறை ஆணையர் பெருமாள்சாமி,  கல்லூரியின் துணைத்தலைவர் ராஜகோபால், முதல்வர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். வைரமுத்து ஆய்வுக்களஞ்சியம் நூல்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட, டைரக்டர் பாரதிராஜா பெற்றுக் கொள்கிறார். பின்னர் தனது படைப்புகள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசுகிறார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமையில் நடக்கும் நிறைவு விழாவில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தவர்களுக்கு சான்றிதழ்களை வைரமுத்து வழங்குகிறார்" என்றார்.